ஐசரி கணேசன் வேல்ஸ் பல்கலைக்கழகம் அறிவிப்பு..!! டாக்டர் பட்டம் வாங்கும் இயக்குனர் சங்கர்..!!

இயக்குனர் ஷங்கருக்கு ஐசரி கணேசன் வேல்ஸ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராகவும், இந்திய சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என்று அறியப்படும் ஷங்கர். இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விக்ரம், அர்ஜுன் என பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கியுள்ளார்.

ஷங்கர் தற்போது ராம் சரண் நடிப்பில் தெலுங்கில் உருவாகும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். அதேபோல் அடுத்ததாக ரஜினிகாந்தை வைத்து அவர் திரைப்படம் இயக்கும் முயற்சியில் இருக்கிறார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் இயக்குநர் ஷங்கருக்கு, ஐசரி கணேஷ் வேல்ஸ் பல்கலைக்கழகம் வரும் 5ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளது. ஏற்கனவே இந்த பல்கலைக்கழகம் நடிகர் சிம்பு உள்ளிட்ட சில நட்சத்திரங்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. இந்நிலையில் இயக்குநர் ஷங்கருக்கு விரைவில் டாக்டர் பட்டம் வழங்கவுள்ளனர்.