நடிகை சித்ரா மரண வழக்கு: ஹேம்நாத் மனு தள்ளுபடி!!

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் தொடர்பாக அவருடைய கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வேண்டுமென ஹேம்நாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த சூழலில் சித்ராவின் தந்தை ஹேம்நாத் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய கூடாது என வழக்கு தொடர்ந்து இருந்தார். அந்த மனுவில் தனது மகள் சித்ராவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் ஹேம்நாத் நாடகத்தில் இருப்பவர்களிடம் நெருங்கிப் பழகுவதால் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
அதோடு சித்ரா வீட்டில் இல்லாத போது பெண் தோழிகளுடன் தனிமையில் இருந்ததாக சித்ராவின் தந்தை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையானது இன்று உயர்நீதிமன்றத்தில் வந்தது. அப்போது ஹேம்நாத் தரப்பில் சித்ராவிடம் வரதட்னை கேட்கவில்லை என்றும் சித்ராவை தற்கொலைக்கு தூண்டவில்லை என்று கூறப்பட்டு இருந்தது.
சித்ராவின் மரண விவகாரத்தில் 2 முன்னாள் அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட இருப்பதாகவும் அவர்களின் விபரம் குறித்து சரியாக தெரியவில்லை என்று கூறப்பட்டது. அனைத்து விவாதங்களையும் கேட்ட நீதிபதி சித்ரா மரணத்திற்கு போதிய ஆதாரம் இருப்பதால் ஹேம்நாத் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய முடியாது என காட்டமாக தெரிவித்துள்ளார்.