அடடே..!! தளபதியின் வாரிசு குடும்பப்படம் இல்லையா? – நியூ அப்டேட் சொன்ன சரத்குமார்…

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் வாரிசு படத்தில் நடித்து வருபவர் நடிகர் விஜய். இப்படமானது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. தளபதிக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துவருகிறார்.

அதே போல பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், ஷ்யாம், யோகி பாபு, ஜெயசுதா, குஷ்பு போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர். 2023 பொங்கலில் வெளியாகும் இப்படமானது ஃபேமிலி டிராமா என்ன பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகர் சரத்குமார் வாரிசு படம் யார் பேமிலி டிராமா என்று சொன்னது? என கேள்வி எழுப்பியுள்ளார். அதோடு இப்படத்தில் ஃபேமிலி இருக்கும் டிராமா இருக்கும் என்டர்டைன்மென்ட் இருக்கும் ஃபைட் இருக்கும் பாடல் எல்லாமே இருக்கும் என கூறியுள்ளார்.

ஏற்கனவே வாரிசு படத்திற்கு தளபதி ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கும் சூழலில் சரத்குமார் வெளியிட்ட அப்டேட்டால் ரசிகர்களின் எதிர்பார்ப்பது மேலும் எகிற செய்துள்ளது என்றே கூறலாம்.

மேலும், 3-ம் கட்ட படபிடிப்பிற்காக தளபதி விஜய் விசாகபட்டினம் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.