நடிகர் ரன்பீர் கபூர் படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து..! ஒருவர் உயிரிழப்பு..!! 

இந்தி நடிகர் ரன்பீர் கபூர் படப்பிடிப்பு நடைபெற்று வரும் மும்பை அந்தேரி பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் நடிகை ஷிரத்தா கபூர் நடிப்பில் இந்தி திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பு மும்பை நகரில் மேற்கு அந்தேரி பகுதியில் நடைபெற்று வருகிறது. 

பெயரிடப்படாத இந்த படத்திற்கான படப்பிடிப்பு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், நேற்று இரவு திடீரென இந்த தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த பகுதி முழுவதும் கரும்புகை காட்சியளித்தது. 

தகவலறிந்து வந்த தீயணைப்பு துறை அதிகாரிகள் தண்ணீரை பீச்சி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்து உள்ளதாக முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது. தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார்.

நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் நடிகை ஷ்ரத்தா கபூர் அண்மையில் ஸ்பெயின் நாட்டில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு விட்டு மும்பை திரும்பினர். அவர்கள் சித்ரகூட்டில் நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருந்த நிலையில் தீ விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published.