வசூலில் மாஸ் காட்டும் ‘தி லெஜெண்ட்’:எத்தனை கோடி தெரியுமா?

சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் முதல் முறையாக தமிழ் திரையுலகில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகியுள்ளார். அந்த வகையில் ‘தி லெஜெண்ட்’ திரைப்படத்தை‌ பிரபல இயக்குனர்‌ ஜேடி மற்றும் ஜெர்ரி இணைந்து சுமார் 100 கோடி மதிப்பீட்டில் உருவாக்கியுள்ளனர்.

பான் இந்தியா படமான இப்படம் தமிழ், தெலுங்கி, இந்தி போன்ற மொழிகளில் இருவாகியுள்ளது. இந்த படத்தில் சரவணன் அருளுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி நடித்து இருக்கிறார். தி லெஜெண்ட் சரவணன் படத்திற்கு வேல் ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருக்கிறார்.

இந்த படத்தில் தி லெஜெண்ட் சரவணன் உடன் இணைந்து மறைந்த காமெடி நடிகர் விவேக், ரோபோ ஷங்கர், பிரபு, விஜய் குமார், நாசர், மையில் சாமி மற்றும் கோவை சரளா, யாஷிகா ஆனந்த் நடித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் ‘தி லெஜெண்ட்’ படமாகது 5 மொழிகளில் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உலகம் முழுவதும் 2500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் நேற்று வெளியான நிலையில் முதல் நாள் வசூலாக சுமார் 1 கோடி எனவும் உலகம் முழுவதும் 2 கோடி வசூலித்தாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…