பிரபல நடிகையால் வந்த பிரச்சனை..? விக்கி – நயன் இடையே மோதல்!!!

தமிழ் திரையுலகில் பல ஆண்டுகளாக காதலர்களாக வலம் வரும் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடிக்கு கடந்த மாதம் ஜூன் 9 ஆம் தேதி திருமணம் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள மகாப்ஸ் பைவ் ஸ்டார் ரிசார்ட்டில் கோலாகலமாக நடைப்பெற்றது.

குறிப்பாக கோலிவுட், ஹாலிவுட் சினிமா துறையை திரும்பிப் பார்க்கும் அளவிற்கு பாலிவுட், கோலிவுட்டில் முக்கிய நட்சத்திரங்கள் ஷாருக்கான், ரஜினி, கமல் போன்றவர்கள் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் திருமணம் முடிந்த அடுத்த நாளே கோவில் தலங்களுக்குச் சென்று வரும் விக்கி – நயன் சமீபத்தில் மாமியார் வீடான கேரளாவிற்கு சென்று தடபுடல் விருந்து நடந்தது.

இந்த சூழலில் தங்களது தேனிலவை தாய்லாந்தில் கொண்ட்டாட சென்றுள்ள ஜோடி மீண்டும் அவரவர் வேலைகளில் பிஸியாக இருந்து வருகின்றனர். இந்த சூழலில் விக்னேஷ் சிவன் இயக்கும் ‘ஏகே 62’ படத்தில் ஹீரோயினாக நடிகை சமந்தாவை தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.

இதை அறிந்த நயன்தாரா, நான் இருக்கும்போது சமந்தாவின் பெயரை நீ எப்படி சொல்லலாம் என்று விக்கியுடன் சண்டைப்போட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அவருடைய ரசிகர்கள் திருமணமாகி 3 மாதம் கூட ஆகவில்லை அதற்குள் சண்டையா? என பல தரப்பட்ட கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.