தனுஷ் நடித்த வாத்தி படத்தின் டீசர் வெளியீடு!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் தனுஷ் இன்றைய தினத்தில் 39 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் தனுஷ் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக அவர் நடித்த பல்வேறு அப்டேட்கள் வந்து கொண்டு இருக்கின்றன.

அந்த வகையில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழ்-தெலுங்கு இருமொழிகளில் உருவாகும் ‘வாத்தி’ படத்தில் நடித்து வருகிறார். தற்போது வாத்தி படத்தின் காட்சிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகிறது. அதே சமயம் தெலுங்கு பதிப்பிற்கு ‘சார்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாத்தி படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த டீசர் தனுஷ் தனது பெயர் என தொடக்கி கல்வியின் மகத்துவத்தை எடுத்துக்காட்டும் விதத்தில் அமைந்துள்ளது தனுஷ் பிறந்த நாளில் வெளியானதால் அவருடைய ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.