பிரபுதேவாவின் பகீரா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

தமிழ்சினிமாவில் முன்னணி நடிகராகவும், நடின இயக்குனராகவும் இருக்கும் பிரபுதேவா. இவர் 90 கிட்ஸ்களில் பல வெற்றி படங்களை கொடுத்து மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். இந்நிலையில் சமீபத்தில் பகீரா என்றபடத்தில் சைக்கோவாக நடித்துள்ளார்.

இப்படத்தினை திரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார். குறிப்பாக 3 கண்களுடன் வித்தியாசமான சைக்கோ கதாபாத்திரத்தில் முதன் முதலாக தமிழ்சினிமாவில் அறிமுகமாகி இருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் எகிற செய்துள்ளது.

இந்த படத்தில் ஜனனி, ரம்யா நம்பீசன்,சஞ்சிதா ஷெட்டி,காயத்ரி, சோனியா அகர்வால், சாக்ஷி அகர்வால் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டிரைலர் கடந்த ஆண்டு வெளியான நிலையில் பல்வேறு காரணங்களினால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போனது. இந்நிலையில் தற்போது இந்த படமானது ஆகஸ்ட் 11 ஆக் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.