இந்தியாவில் ஒரு நாள் முன்பே வெளியாகும் புல்லட் டிரெய்ன்  திரைப்படம்..!!

பிராட் பிட் நடித்துள்ள புல்லட் டிரெய்ன்  திரைப்படம் இந்திய திரையரங்குகளில் ஆகஸ்ட் 4-ம் தேதியே வெளியாகும் என படக்குழு   அறிவித்துள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி – நகைச்சுவை கலந்த திரைப்படமான புல்லட் டிரெய்ன் திரைப்படம் அமெரிக்காவில் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னதாக ஆகஸ்ட் 4ம் தேதி அன்று இந்தியாவில் வெளியாக போவதாக   தகவல் வெளியாகியுள்ளது.  

டெட்பூல் 2 இயக்குனர் டேவிட் லீட்ச் இயக்கத்தில் பிராட் பிட் , கிஸ்ஸிங் பூத்,  ஜோய் கிங், பிரையன் டைரி ஹென்றி மற்றும் ஹாலிவுட்டின் மிகவும் பிரபலமான சில முன்னணி நட்சத்திர குழுவினர் இணைந்து நடித்துள்ளனர். மேலும் அகாடமி விருது பெற்ற நடிகை சாண்ட்ரா புல்லக் இவருடன் இணைந்து  புல்லட் டிரெய்ன் படத்தில் நடித்துள்ளார். 

பிராட் பிட் 2019 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல் முறையாக பெரிய திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மென்ட் இந்தியா நிறுவனம் புல்லட் டிரெய்ன் திரைப்படம் ஆகஸ்ட் 5ம் தேதி வெளியிடுவதாக இருந்த நிலையில், உலகளாவிய வெளியீட்டிற்கு ஒரு நாள் முன்னதாக, ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில், ஆகஸ்ட் 4-ஆம் தேதியே, இந்தியாவில் உள்ள திரையரங்குகளில் வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.