எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!! வட்டம் படத்தின் டிரைலர் இன்று வெளியீடு..!!

இயக்குனர் கமலக்கண்ணன் இயக்கத்தில் சிபிராஜ் கதாநாயகனாக நடிக்கும் வட்டம் படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில்,  எஸ் ஆர் பிரகாஷ் பாபு மற்றும் எஸ் ஆர் பிரபு ஆகியோர் தயாரித்துள்ளனர். 

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தொடர்ந்து சிறந்த படங்களை வெளியிட்டு வரும் நிலையில்  இந்த பட்டியலில் விரைவில் நேரடியாக வட்டம் திரைப்படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தில் ஆண்ட்ரியா, அதுல்யா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை நிவாஸ் கே பிரசன்னா இசை அமைத்துள்ளார். இந்த படத்தை பி.வி சங்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் இந்த படத்தில் நக்கலைட்ஸ் சசி நடித்துள்ளார்.  திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த படம் மனோ, கௌதம் மற்றும் பாரு ஆகிய கதாபாத்திரங்கள் 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து சந்திக்கும் பிரச்சினைகளும் அதை அவர்கள் எதிர்கொள்ளும் முறையும் தான் இதில் கதைக்களமாக அமைத்துள்ளது.

சமீபத்தில் வட்டம்  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இன்று இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.  மேலும் இப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இந்த மாதம் 29ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…