அடி தூள்..!!! பொன்னியின் செல்வன் படத்தில் வெளியானதும் அப்டேட்…

மிகப் பிரமாண்ட பட்ஜெட்டில் வரலாற்றுப் படமாக உருவாகி வரும் படம் பொன்னியின் செல்வன். இப்படத்தில் விக்ரம், கார்த்தி, விக்ரம் பிரபு, சரத்குமார், ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய் மற்றும் திரிஷா போன்ற பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
ரவி வர்மன் ஒளிப்பதிவில் டாக்கீஸ் மற்றும் லைகா ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.
தற்போது இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் தமிழில் வெளியிடுவதற்கான உரிமையை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றி உள்ளது.
ஏற்கனவே கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா ஆகியோரது தோற்றங்களுடன் கூடிய தனித்தனி போஸ்டர்களால் வெளியிடப்பட்ட நிலையில் சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் படத்திற்காக ஏ.ஆர் ரகுமானின் இசை அமைத்திருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.