நடிகருடன் காரில் சிக்கிய பிரபல நடிகை: ஓட ஓட விரட்டிய தரமான சம்பவம்!!

ஒடியாவில் பிரபல நடிகையாக இருக்கும் ப்ரக்ருதி மிஸ்ரா தேசிய விருது ஆவார். இவர் ஒடிய மொழியில் பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தவர். இந்நிலையில் நேற்று முன்தினம் நடிகர் பாபுஷான் மொஹந்தியுடன் காரில் சென்று கொண்டிருந்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் எதிர்பாராதவிதமாக பாபுஷானின் மனைவி த்ருப்தி பின்னாலேயே காரில் சென்று விரட்டி பிடித்ததாக கூறப்படுகிறது. அப்போது நடிகை ப்ரக்ருதியையும் தலைமுடியை பிடித்து சரமாறியாக தாக்கியுள்ளார். இந்த சம்பவம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

பின்னர் பாபுஷானின் மனைவி த்ருப்தி கூறுகையில் ப்ரக்ருதி மிஸ்ராவால் தனது குடும்பமே அழிந்துவிட்டதாகவும் தனது கணவருக்கும் அவருக்கும் இடையில் கள்ள தொடர்பு இருப்பதாக கூறியிருப்பது சினிமா வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்னர் பேசிய ப்ரக்ருதி மிஸ்ரா ஒவ்வொரு கதைக்கும் இரண்டு பக்கங்கள் இருப்பது போல
துரதிர்ஷ்டவசமாக பெண்களைக் குற்றம் சொல்லும் சமூகத்தில் வாழ்ந்து வருவதாகவும், நானும் எனது சக நடிகர் பாபுஷானும் உத்கல் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு சென்றதாக கூறியுள்ளார்.

அந்த சமயத்தில் பாபுஷானின் மனைவி சில நபர்களுடன் வந்து தாக்கியதாகவும், இதனால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும், பாபுஷானின் மனைவியின் இத்தகைய நடத்தையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.