எல்லா மொழிப் படங்களும் எல்லா இடங்களிலும் வெளியாக வேண்டும்- நடிகர் சுதீப்

விக்ராந்த் ரோணா திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் கிச்சா சுதீப், நிரூப் பண்டாரி, நீத்தா அசோக் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கிச்சா சுதீப், தமிழ்நாட்டில் நான் எப்போது வந்தாலும் எனக்கு நிறைய மரியாதை கொடுத்து என்னுடைய வேலையை பார்த்து ரசிக்கிறார்கள் அதற்கு நன்றி. .

எல்லா மொழிப் படங்களும் எல்லா இடங்களிலும் வெளியாக வேண்டும். சினிமா என்பது ஒரு கதை அதை எல்லாருக்கும் சொல்ல வேண்டும் என்பதுதான் எனது கருத்து. காசு இருக்கு என்பதற்காக ஒரு பெரிய படம் பண்ணலாம் என்று இதை எடுக்கவில்லை. இந்த கதை எனக்கு பிடித்து இருந்தது. இதை எல்லாரும் பார்க்க வேண்டும் என்று தான் இதை எடுத்துள்ளோம்.

Upcoming Bollywood Movies in July 2022 | Search Hyderabad

தற்போது வரை இயக்குனர் இந்த படத்திற்காக வேலை செய்து வருகிறார். 3-டியில் வேலை செய்வதால் அவரால் இங்கு வர முடியவில்லை. தமிழ் படத்தில் நீங்கள் ஏன் நடிக்கவில்லை என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்து பேசிய சுதீப் ஈ படத்திற்கு பிறகு ஹீரோவா இல்லை வில்லனா என்று தெரியவில்லை.

உங்களை வைத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை என பலர் தெரிவித்துள்ளனர். அதனால் தான் தமிழ் படங்கள் எதுவும் வரவில்லை. மேலும் புலி படத்தை பார்த்து விட்டு நீங்கள் தானே என்னை வீட்டுக்கு அனுப்பினிர்கள் என்று நகைச்சுவையாக அறிவித்தார்.  

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…