அதிக வருமான வரி செலுத்தியவர் நடிகர் ரஜினிகாந்த்..!! வருமான வரித்துறை பாராட்டு..!! 

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வருமான வரி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த் என பாராட்டப்பட்டு வருமான வரித்துறை சார்பில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ரஜினிகாந்த் அவர்களுக்கு  விருது வழங்கி கவுரவித்துள்ளார். 

சென்னை ஆழ்வார்பேட்டை மியூசிக் அகாடமியில் வருமான வரி தினம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினர்களாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வரர் நாத் பண்டாரி, தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் தமிழிசை, ரஜினிகாந்த் Super Star மட்டுமல்ல. Super Taxpayer என்று புகழாரம் சூட்டி அவருக்கு விருது அறிவித்தார். ரஜினிகாந்த் சார்பாக அவரது இளைய மகள் சௌந்தர்யாவுக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விருது வழங்கி கவுரவித்தார். அப்போது பேசிய தமிழிசை பிரதமர் நரேந்திர மோடியின் தொடர் முயற்சியால், பொதுமக்கள் முறையாக வரி செலுத்த முன்வந்துள்ளனர்.

Image

அனைவரும் கண்டிப்பாக வரி செலுத்த வேண்டும். கிராமப்புற பள்ளிகளை மேம்படுத்த வருமான வரித்துறை பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 2025-ம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சியை இந்தியா அடைய, பிரதமர் மோடி உழைத்துக் கொண்டிருக்கிறார் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *