நடிகர் அர்ஜுனின் தாயார் காலமானார்..!!  இரங்கல் தெரிவித்த திரைத்துறையினர்..!!

நடிகர் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவம்மா கர்நாடக மாநிலம் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

உடல்நலக் குறைபாடு காரணமாக அவரது உயிர் இன்று பிரிந்துள்ளது. லட்சுமி தேவம்மாவுக்கு 2 மகன்கள் மற்றும் மகள் உள்ளனர். மூத்த மகன் கிஷோர் சார்ஜா கன்னட திரையுலகில் இயக்குனராக இருக்கிறார்.

இரண்டாவது மகன் அர்ஜுன். பெங்களூரில் உள்ள அர்ஜுனின் சொந்த ஊரான மதுகிரியில்  அஞ்சலிக்கு வைக்கப்பட்டு அவர்கள் தோட்டத்தில் உள்ள அர்ஜுன் அப்பாவின் சமாதி அருகே நாளை நல்லடக்கம் செய்யப்பட  உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 

தென்னிந்திய சினிமாவில் 30 ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான படங்களில் நடித்து ஆக்ஷன் கிங் என அர்ஜுன் பெயர் பெற்றுள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த இரும்புத் திரை படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Leave a Reply

Your email address will not be published.