நடிகர் யோகிபாபு வுக்கு கிடைத்த அங்கீகாரம் – 2 தேசிய விருதைப் பெற்ற மண்டேலா படம்!!

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக காமெடி நடிகராக இருந்த யோகி பாபு மண்டேலா படத்தில் கதாநாயகனாக நடித்தார். இதனிடையே ஒய்நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த் வழங்க இயக்குநர் பாலாஜி மோகன் தயாரிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியது.

இப்படத்தில் ஷீலா ராஜ்குமார், சங்கிலி மருகன், ஜி.எம்.சுந்தர் போன்ற நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இப்படம் விமர்சனம் ரீதியாக பல கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் இப்படத்தின் மூலம் இயக்குநர் மடோன் அஸ்வின் தனக்கென்று ஒரு அதிகாரத்தை தக்க வைத்தார்.

இந்நிலையில் 68-வது தேசிய விருது வழங்கும் விழாவில் யோகி பாபு நடித்த மண்டேலா படம் சிறந்த வசனத்திற்கான விருதினையும், சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதினை பெற்று சாதனை பெற்றுள்ளது. மேலும், யோகி பாபு பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவர் நடித்த படத்திற்கு விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.