விரைவில் விக்கி – நயன் திருமண வீடியோ: நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்ட ஹாப்பி நியூஸ்!

நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் சென்னை மாகாபலிபுரத்தில் உள்ள கடற்கரை ரிசார்ட்டில் உறவினர்கள், நண்பர்கள், திரை நட்சத்திரங்கள் படைசூழ கோலாகலமாக ஜீன் 9-ஆம் தேதி நடைபெற்றது.

தமிழ் சினிமாவில் 7 ஆண்டுகளாக காதலர்களாக வலம் வரும் இயக்குனர் விக்னேஷ் சிவன் – நடிகை நயன்தாரா திருமணத்திற்கு தமிழக முதல்வர் மட்டுமின்றி தென் இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய பிரபலங்களும் இவர்களது திருமணத்தில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் தனது தேனிலாவை முடித்துவிட்டு தற்போது அட்லீ இயக்கும் படபிடிப்பில் கலந்துகொண்டு தற்போது பிஸியாக இருந்து வருகிறார். இந்த சூழலில் இவர்களது திருமணம் நெட்பிளிக்ஸ் ஒளிபரப்பு செய்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக ரூ. 25 கோடி ரூபாய் பணத்தைத் திருப்பிச் செலுத்தும்படி நயன்தாராவுக்கு நெட்பிளிக்ஸ் நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்பட்டு வந்தது. இந்த சூழலில் நெட்ஃபிளிக்சில் நயன் – விக்கி திருமண வீடியோ விரைவில் வெளியாக உள்ளதாகவும், அதில் நயன்தாரா வாழ்க்கை பயணம் இடம்பெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், இதற்கான டைட்டில் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.