ஆர்ஆர்ஆர் படம்  இனவெறியை தூண்டுவதாக உள்ளது – ராபர்ட் டோபிஸ்

டைரக்டர் ராஜமவுலி இயக்கிய ஆர்ஆர்ஆர் இதுவரை 1200 கோடிகளை வசூல் செய்துள்ளது. ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் பான் இந்தியா படமாக 5 மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்டது.

1920 களில் ஐதராபாத்தில் பிரிட்டிஷ் அரசை எதிர்த்து போராடிய சுதந்திர போராட்ட வீரர்கள் இருவரின் கதையை மையமாக வைத்து ராஜமெளலி இந்த படத்தை இயக்கி இருந்தார்.

சர்வதேச திரைப்படங்கள் பிரிவில் 2023 ம் ஆண்டில் ஆஸ்கர் விருத்திக்காகவும் ஆர்ஆர்ஆர் படம் பரிந்துரைக்கப்பட்ட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் வரலாற்று பேராசிரியரும், பிரபலமான எழுத்தாளருமான ராபர்ட் டோபிஸ் ஆர்ஆர்ஆர் படத்தையும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தையும் மிக கடுமையாக விமர்சித்து கட்டுரை ஒன்றை எழுதி உள்ளார்.

ஆர்ஆர்ஆர் படம் பிரிட்டிஷ்க்கு எதிரான இனவெறியை தூண்டுவதாக எடுக்கப்பட்டுள்ளது. தவறான வரலாற்று வெற்றியை நெட்ஃபிளிக்ஸ் ஊக்குவிக்கிறது. கவர்னர் ஸ்காட் மற்றும் அவரது மனைவியை இந்த படத்தில் மோசமாக காட்டி உள்ளனர்.

இந்திய அரசியல் மற்றும் கலாச்சாரத்தின் ஆதிக்கம் செலுத்தும் பிற்போக்கான வன்முறையான இந்து தேசியவாதம் மோடி அரசால் தூண்டப்படுவது ஆர்ஆர்ஆர் படத்தில் காட்டி உள்ளார் என குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…