பிரபல நடிகை நித்யா மேனனுக்கு திருமணம்? – ரசிகர்கள் மகிழ்ச்சி!!

ஓ காதல் கண்மணி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தவர் நித்யா மேனன். அதன்பின்னர் மெர்சல் படத்தில் தளபதிக்கு ஜோடியாக நடித்தது நீங்காத இடம்பிடித்தார்.
தற்போது தற்போது தனுஷ் உடன் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் தாய்க்கிழவி பாடலானது பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகிறது. இருப்பினும் நித்யா மேனனுக்கு எப்போது திருமணம் என ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர். இந்நிலையில் நித்யா மேனன் திருமண செய்தி ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.
அந்த வகையில் மலையாள முன்னணி நட்சத்திரமாக இருக்கும் ஹீரோவைத் திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக காதல் திருமணம் என்றும் பெற்றோர்களை சமாதானப்படுத்தி இருவரும் திருமணம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை என சினிமா வட்டாரங்களில் கூறுகின்றனர். அதோடு மலையாளத்தில் ஆறாம் திருகல்பனா என்ற படத்தில் நடித்திருக்கும் நித்யா அதன் பிறகு வேறெந்த படத்திலும் ஒப்பந்தமாகவில்லை என கூறப்படுகிறது.