சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு: ஹேம்நாத்க்கு செக் வைத்த நண்பர்!!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத்க்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்துசெய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான வழக்கில் அவரது கணவர் கைது செய்யப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில் ஹேம்நாத்க்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்துசெய்ய கோரி அவரது நண்பர் சையத் ரோஹித் என்பர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். சித்ரா தற்கொலை வழக்கில் மற்ற நண்பர்கள் சாட்சி அளிக்க மறுத்த போது தான் மட்டுமே சாட்சி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதற்காக ஹேம்நாத் தன்னை கொலை செய்ய போவதாக மிரட்டல் விடுத்ததாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஹேம்நாத்தால் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் ஆபத்து இருப்பதாகவும், அவரது ஜாமினை ரத்துசெய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஹேம்நாத், சித்ராவின் தந்தை மற்றும் காவல்துறையினர் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…