இரட்டை குழந்தைக்கு தாயான ஆலியா பட்? – ரசிகர்கள் ஷாக்!!

பாலிவுட்டில் மிக முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ஆலியாபட் நடிகர் ரன்பீர் கபூருடன் பிரமாஸ்திரா படத்தில் முதன் முதலாக ஒன்றாக நடித்தனர். அந்த படத்திற்கு பிறகு இருவருக்கும் காதல் மலர்ந்தது.

இந்நிலையில் மும்பையில் உள்ள ரன்பீர் கபூர் இல்லத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இவர்களுடைய திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள் மட்டும் அழைக்கப்பட்ட நிலையில் கரீனா கபூர், நீத்து கபூர், ஐயன் முகர்ஜி உள்ளிட்ட பிரபலங்கள் திருமணத்தில் கலந்து கொண்டனர்.

இதனிடையே ஆலியா பட் கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்கேன் செய்து உறுதி என்ற செய்தியை ரசிகர்களுக்கு தெரிவித்தார்.

சமீபத்தில்தான் ரன்பிர் கபூர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, ‘ஒரு உண்மை மற்றும் ஒரு பொய் சொல்ல வேண்டும் என தொகுப்பாளினி கேள்வி கேட்டதாக கூறப்படுகிறது.

அப்போது பேசிய அவர் ’நாங்கள் இரட்டை குழந்தையை எதிர்பார்க்கிறோம்’மற்றும் ’ஒரு பெரிய சரித்திரக் கதையில் நடிக்கிறேன்’ என பதிலளித்தார். அதோடு இவற்றில் எது பொய்? எது உண்மை என்பதை நீங்களே தெரிந்துகொள்ளுங்கள் என கூறியுள்ளார்.

இதனால் ஆலியா பட்டுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறப்பது உண்மை என்ற செய்தி கிட்டத்தட்ட உறுதியாகி இருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.