கஷ்டங்களும் தடைகளும் தான் என்னை வலிமை ஆக்கியது – நடிகர் சுதீப்

நடிகர் சுதீப் தற்போது விக்ராந்த் ரோணா என்ற பான் இந்தியா படத்தில் நடித்துள்ளார். அனுப் பண்டாரி இயக்கியுள்ள இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.  ஃபேண்டஸி ஆக்‌ஷன் அட்வெஞ்சர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படம் கன்னடம், இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் வரும் 28-ம் தேதி படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் படம் குறித்து பேசியுள்ள நடிகர் சுதீப் நான் இயக்குநராக வேண்டும் என்று தான் சினிமாவுக்குள் நுழைந்தேன். ஆனால். நடிகனாகி விட்டேன். என் சினிமா பயணம் எளிதானதல்ல உங்கள் பயணத்தில் நினைவில் இருப்பது எது என்று கேட்டால், என் போராட்டங்கள் என்பேன்.

நல்ல விஷயங்கள் எப்போதும் எதையும் கற்றுத் தரவில்லை. தவறுகளில் இருந்தே கற்றுக் கொள்கிறேன். அப்படித்தான் கற்றுக்கொண்டேன். கஷ்டங்களும் தடைகளும் தான் என்னை வலிமையாக்கியது என்றார்.

மேலும், நாடு முழுவதும் திரைப்படங்கள் வழியாக நீக்கியுள்ள மொழித்தடைகள் குறித்து பேசிய அவர் இந்தியாவில் கட்டுப்பாடுகள் மற்றும் மொழித் தடைகள் நீங்கி உள்ளதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். தெற்கில் உள்ள படங்கள் தற்போது வடக்கில் நான் டெல்லி, கோவா, மும்பை, ஜெய்ப்பூர் உள்ள திரையரங்குகளில் வெளியாவதில் மகிழ்ச்சி என்றார். 

Leave a Reply

Your email address will not be published.

75 வது சுதந்திர தினம்: இந்தியாவை உருவாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் – திரௌபதி முர்மு

இந்திய நாட்டின் பாதுகாப்பு, பராமரிப்பு, முன்னேற்றம், நல்வளம் காக்க அனைவரும் முன்வர வேண்டும்…