ஜெய் பீம் பட விவகாரத்தில் சூர்யாவுக்கு எதிராக கடும் நடவடிக்கை கூடாது – கோர்ட் உத்தரவு!!

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஜெய்பீம் படத்தில் இந்து வன்னியர் மக்களின் மனதை புண்படுத்தும் வகையிலும் காட்சிகள் இருப்பதாகவும், பிற மக்களிடம் வெறுப்பை வெளிப்படுத்தும் வகையில் அவர்கள் வழிபடக்கூடிய அக்னிகுண்டம் இழிவுபடுத்தும் வகையில் காட்சி அமைக்கப்பட்டு இருப்பதாக ம் கூறி புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என இயக்குனர் ஞானவேல் மற்றும் சூர்யா தரப்பில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இதனிடையே ஜெய் பீம் படத்தில் சர்ச்சைக்குரிய நாள்காட்டி புகார் அளிப்பதற்கு முன்பாகவே நீக்கப்பட்டு இருந்ததாக கூறியுள்ளார்.

இந்த வழக்கின் விசாரணை யானது என்று ஊர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அமர்வில் வந்தது. அப்போது பேசிய நீதிபதி இயக்குனர் ஞானவேல் மற்றும் நடிகர் சூர்யா உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்க கூடாது என கூறினார்.

அதோடு இந்த வழக்கு குறித்து புகார்தாரர் தரப்பிலும், காவல்துறையினர் தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணை ஜூலை 21 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.