அடி தூள்!! தி லெஜண்ட் படத்தின் 3-வது பாடல் வெளியீடு..

சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் முதல் முறையாக தமிழ் திரையுலகில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகியுள்ளார். அந்த வகையில் ‘தி லெஜெண்ட்’ திரைப்படத்தை பிரபல இயக்குனர் ஜேடி மற்றும் ஜெர்ரி இணைந்து சுமார் 100 கோடி மதிப்பீட்டில் உருவாக்கியுள்ளனர்.
பான் இந்தியா படமான இப்படம் தமிழ், தெலுங்கி, இந்தி போன்ற மொழிகளில் இருவாகியுள்ளது. இந்த படத்தில் சரவணன் அருளுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி நடித்து இருக்கிறார். தி லெஜெண்ட் சரவணன் படத்திற்கு வேல் ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருக்கிறார்.
இந்த படத்தில் தி லெஜெண்ட் சரவணன் உடன் இணைந்து மறைந்த காமெடி நடிகர் விவேக், ரோபோ ஷங்கர், பிரபு, விஜய் குமார், நாசர், மையில் சாமி மற்றும் கோவை சரளா, யாஷிகா ஆனந்த் நடித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் மே மாதம் 29-ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கத்தில் தி லெஜண்ட் திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ ரீலிஸ் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இதில் தமன்னா, ஹன்சிகா உட்பட முன்னணி டாப் ஹீரோயின்கள் கலந்துகொண்டனர். இந்த சூழலில் ‘தி லெஜெண்ட்’ உலகம் முழுவதும் ஜூலை 28-ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள ரொமாண்டிக் பாடலான போ போ போ வீடியோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது.