வசமாக சிக்கிய பவி டீச்சர்..!! சர்ச்சை கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் மக்கள்..!

நடிகர் இயக்குனர் பார்த்திபன் வித்தியாசமான முயற்சியில் உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் படமாக உருவாகியுள்ள இரவின் நிழல் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியாகி பல பாராட்டுக்களை பெற்று வருகிறது. சர்வதேச திரைப்பட விழாக்களில் ஏற்கனவே திரையிடப்பட்ட இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்று இருந்தது.
இந்நிலையில் படத்தைப் பார்த்தவர்கள் நன்றாக இருப்பதாக கூறி பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். இதனால் படக்குழுவினர் உற்சாகத்தில் இருக்கிறார்கள். இந்த படத்தில் நடிகை பிரிகிடா முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். குறிப்பாக நிர்வாணக் காட்சி ஒன்றில் பிரிகிடா நடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
இந்நிலையில் சமிபத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பார்த்திபன் இப்படத்தில் ஒரு நிர்வாண காட்சி இருப்பதாக கூறியிருந்தார். தற்போது இது பற்றி பிரிகிடா (பவி டீச்சர்) வெளிப்படையாக பேசியுள்ளார். இப்படத்தில் கிட்டத்தட்ட 19 நொடிகள் பிரிகிடா ஆடை இன்றி நடித்துள்ளேன். இதுகுறித்த அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்ட போது படத்தின் கதைக்களம் அப்படிப்பட்டது.

மேலும் அவர் பேசுகையில் கதையின் போலித்தனம் மாறாமல் இருக்க அப்படி செய்தோம் உதாரணமாக ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு(சேரி) சென்றால் அங்கு மக்கள் எப்படி பேசுவார்கள் என்பது நமக்கு தெரியும் என குறிப்பிட்ட மக்களை தாழ்த்தி பேசியுள்ளார். இது தற்போது விவாத பொருளாக மாறியுள்ளது.
சேரியில் இருப்பவர்கள் கெட்ட வார்த்தைதான் பேசுவார்கள் என தீண்டாமை புத்தியோடு பேசி ஒரு சமூகத்தை அவமதித்த இரவின் நிழல் திரைப்பட நடிகை பிரிகிடா மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கன்னடம் தெரிவித்து வருகின்றனர்.