உன்னோட பெரிய தொல்லையா போச்சுப்பா..!! சரி போ நடிக்க வரேன்..!!

சிவகார்த்திகேயன் நடிக்கப் போகும் அடுத்த படத்தில் கவுண்டமணியை நடிக்க வைக்க தீவிர முயற்சி செய்து வருவதாக செய்தி பரவி வருகிறது. இதற்காக சமீபத்தில் காமெடி நடிகர் கவுண்டமணியை சந்தித்து பேசியதாகவும் அவர்கள் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி உறுதியளித்தது.

சில காலமாக சினிமாவில் நடிக்காமல் ஓய்வில் இருந்து வந்த நிலையில் கடைசியாக 49 ஓ, எனக்கு வாய்த்த அடிமைகள் உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால், அந்த படங்கள் பெரிதாக போகவில்லை. கவுண்டமணியை சமீபத்தில் அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்து நீண்ட நேரம் பேசியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

ஒரே லொள்ளு தான் ! சிவகார்த்திகேயனுக்கு பெரியப்பாவாக நடிக்கும் கவுண்டமணி ! -  Filter Cinema

சிவகார்த்திகேயன் நடிக்கும்  புதிய படத்தில் அவருக்கு பெரியப்பாவாக நடிக்க நடிகர் கவுண்டமணியை அணுகி உள்ளதாகவும், அதற்கான சந்திப்பு தான் சமீபத்தில் நடைபெற்றதாகவும் தற்போது தகவல்கள் லீக்காகி உள்ளது. 

நடிக்க ஒப்புக்கொண்ட கவுண்டமணி தனக்கான போர்ஷன்கள் 25 நாட்களுக்குள் முடித்து விட வேண்டும், இரவு நேர படப்பிடிப்பு வைக்கக் கூடாது உள்ளிட்ட சில கண்டிஷன்கள் சொல்லியிருக்கிறார். சிவகார்த்திகேயன் – கவுண்டமணி காம்பினேஷன் எப்படி இருக்கும் என ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published.