சிக்கலில் பொன்னியின் செல்வன் படம்..!! மணிரத்னம், நடிகர் விக்ரம் உள்ளிட்டோருக்கு வக்கீல் நோட்டீஸ்..!!

பொன்னியின் செல்வன் படத்தில் வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்ட இருப்பதாக கூறி இயக்குனர் மணிரத்னம் நடிகர் விக்ரம் உள்ளிட்டோருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சென்னை கொருக்குப்பேட்டை சேர்ந்த செல்வம் என்பவர் அனுப்பியுள்ள நோட்டீசில், சோழ வம்சத்தில் நாமம் இடும் பழக்கம் இல்லாத நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள விக்ரம் நெற்றியில் நாமம் இட்டுள்ளது போன்ற காட்சி அமைப்பு தவறானது எனவும் இயக்குனர் மணிரத்னம் வரலாற்றை மறைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மணிரத்னத்தின் “பொன்னியின் செல்வன்“ நடிகர்கள்… ஏற்று நடிக்கும் கதாபாத்திரம்,  தனித்தன்மைகள்! - தமிழ் News - IndiaGlitz.com

இதுபோல் இன்னும் எத்தனை வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளது என்பதை படம் பார்த்தால் தான் தெரிந்து கொள்ள முடியும் என்பதால் படத்தை வெளியிடும் முன் தங்களுக்கு திரையிட்டு காட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

தங்களுக்கு திரையிட்டு காட்டாமல் படத்தை வெளியிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொன்னியின் செல்வன் படத்தில் வரலாறு மறைக்கப்பட்டுள்ளது என்பது எங்களுக்கு தெரிய வேண்டும் வக்கீல் நோட்டீஸ் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இயக்குனர் மணிரத்னம் படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், நடிகர் விக்ரம் உள்ளிட்ட முக்கிய நடிகர்களும் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *