வெற்றி பெற்ற கார்கி படம்..!! நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா..!!

2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழிகளில்  வெளியான கார்கி  படம் அனைத்து தரப்பினரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் கார்கி படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவிற்கு நடிகர் சூர்யா, ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

சூர்யா தனது ட்விட்டர் பதிவில், கார்கி படத்திற்கு அனைவரும் அளித்துள்ள பேராதரவுக்கு நன்றி. சிறப்பாக எழுதப்பட்டு, சிறப்பாக படமாக்கப்பட்ட கார்கி ஜோ மற்றும் என்னுடைய நினைவில் எப்போதும் நீங்காமல் இருக்கும்.

படத்தை ஆதரித்த மீடியா, பத்திரிகை, நலம் விரும்பிகள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார். இந்த படம் டைரக்டர் கெளதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார்.

இதில் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பெரும்பாலானவர்கள் 4 முதல் 4.5 என்ற அளவிலேயே ரேட்டிங் கொடுத்துள்ளனர். இதனால் படக்குழுவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

சாய் பல்லவியின் நடிப்பு அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் கார்கி படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவிற்கு நடிகர் சூர்யா, ட்விட்டரில் நன்றி தெரிவித்து உள்ளது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…