பிரதாப் போத்தன் காலமானார்..!! இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்..!!

உடல்நலக்குறைவு காரணமாக பிரபல திரைப்பட இயக்குனரும் நடிகருமான பிரதாப் போத்தன் இன்று காலை காலமானார். பிரதாப் போத்தன் பல மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 

குறிப்பாக தமிழில் வறுமையின் நிறம் சிவப்பு, நெஞ்சத்தை கிள்ளாதே, பன்னீர் புஷ்பங்கள், போன்ற பல படங்களில் நடித்துள்ளார். வெற்றி விழா, மை டியர் மார்த்தாண்டன் போன்ற படங்களை பிரதாப் போத்தன் இயக்கத்தில் வெளிவந்த முக்கிய படங்கள் ஆகும்.

மலையாளம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான பிரதாப் போத்தன் அழியாத கோலங்கள் படம் மூலம் தமிழில் அறிமுகமாகி இருந்தார். இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலை அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடகம் டூ சினிமா' : பிரதாப் போத்தனின் திரைப்பயணம் | Dinamalar

மேலும் அவரது இறுதி சடங்கு நாளை காலை நடைபெறும் என கூறப்படுகிறது. பிரதாப் போத்தனின் உறவினர் பலரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் வந்ததும் இறுதிச் சடங்கு குறித்த முழு தகவல் வெளியாகவில்லை. 

ஃபிலிம் ஃபேர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பிரதாப் போத்தன் பெற்றுள்ளார். பல விருது நிகழ்ச்சிகளுக்கு தேர்வுக் குழுவிலும் அவர் இடம் பெற்றிருந்தார் என்பது  குறிப்பிடத்தக்கது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *