சூப்பர் ஸ்டாரிடம் ஆசி பெற்ற நடிகர் ராகவா லாரன்ஸ்..!!

நடிகர் ராகவா லாரன்ஸ் சந்திரமுகி 2 படத்திற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் ஆசி பெற்ற புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  

பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான திரைப்படம் சந்திரமுகி. இந்த படத்தில் பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். 

இந்தப் படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில் சந்திரமுகி 2 ஆம் பாகம்  தயாரிக்க வருகிறது. சந்திரமுகி 2 திரைப்படம் லைகா புரொடக்ஷன் தயாரிக்க P.வாசு இப்படத்தை இயக்குகிறார். 

இந்த நிலையில் சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு இன்று மைசூரில் துவக்கியது. இதையொட்டி தனது குருவான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து நடிகர் ராகவா லாரன்ஸ் ஆசி பெற்றார்.

ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, தோட்டா தரணி கலை இயக்குனராக பணியாற்றுகிறார். மற்ற நடிகர், நடிகைகள் விவரம் விரைவில் வெளியாக உள்ளது. சந்திரமுகி 2 படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார். இந்த படத்தில் நடிகர் வடிவேலு நடிக்கிறார் என கூறப்படுகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *