‘இரவின் நிழல்’ – பார்த்திபனுக்கு சூப்பர்ஸ்டார் பாராட்டு!!

ஒத்த செருப்பு படத்தில் நடித்திருந்த பார்த்திபனின் படமானது தேசிய விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றது. இந்நிலையில் தற்போது பார்த்திபன் இரவின் நிழல் என்ற படத்தை இயக்கி உள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்தப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளதாக நடிகரும், இயக்குனருமான பார்திபன் அறிவித்தார். இதனிடையே இப்படம் கேன்ஸ் திரைப்பல விழாவிற்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் அகிரா புரொடக்ஷன்ஸ் தாயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், பிரியங்கா ருத், பிரிகடா போன்ற நட்சத்திரப்பட்டாளங்கள் நடித்துள்ளனர்.

இந்த சூழலில் நடிகர் ரஜினிகாந்த் ‘இரவின் நிழல்’ படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். குறிப்பாக உலகத்திலேயே இது போன்ற படத்தை யாரும் எடுத்தது கிடையாது என்றும் இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பார்த்திபன் வித்தியாசமான முயற்சிகள் செய்யவேண்டும் என்று துடிக்கிற கலை ரசிகர் என கூறி வாழ்த்து தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published.