வெளியானது நயன்தாரா படத்தின் புதிய அப்டேட்!! – குஷியில் ரசிகர்கள்…

கோலிவுட், பாலிவுட்டில் கலக்கி வரும் நயன்தாரா தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் விஜய், அஜித், சூர்யா மற்றும் ரஜினிகாந்த் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து தமிழ்சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுகிறார்.

இந்நிலையில் நானும் ரவுடிதான் படத்தின் மூலம் அறிமுகமான விக்னேஷ் சிவன் மீது காதல் மலர்ந்து கடந்த 7 ஆண்டுகளாக காதலர்களாக வலம் வந்த இவர்கள் கடந்த மாதல் ஜீன் 9-ஆம் தேதி சென்னை மாகாபலிபுரத்தில் உள்ள கடற்கரை ரிசார்ட்டில் உறவினர்கள், நண்பர்கள், திரை நட்சத்திரங்கள் படைசூழ கோலாகலமாக விக்கி -நயன் திருமணம் நடந்து முடிந்தது.

தற்போது தேனிலவை கொண்டாட தாய்லாந்திற்கு சென்ற இவர் தற்போது முடித்துவிட்டு அட்லி இயக்கும் ஹாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இந்த சூழலில் நயன்தாராவின் 75-வது படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

அதன் படி, இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்தவர் தான் நிலேஷ் கிருஷ்ணா என்பவர் நயனை மையமாக வைத்து படத்தின் கதை அமைந்துள்ளதாகவும், படத்திற்கான பூஜை சென்னையில் நடைப்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

அதே போல் ராஜா ராணியை அடுத்து தற்போது ஜெய் மீண்டும் நயன்தாராவுடன் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஜெய் – நயன் நடிப்பில் வெளிவந்த படம் மிகப்பெரிய வெற்றை கொடுத்த நிலையில் தற்போது இந்த படத்தின் எதிர்பார்ப்பானது மேலும் அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.