நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை..!!அதிர்ச்சி தரும்  குற்றப்பத்திரிகை..!!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக போதைப் பொருட்கள் சப்ளை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை ரியா சக்கரவர்த்தி மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் பயோ பிக்  மூவியாக வெளிவந்த தோனி திரைப்படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலம் ஆனார். 

பாலிவுட் திரையுலகில் உச்சத்தை தொட்டிருந்த சமயத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் அவரது இல்லத்தில் சுஷாந்த் சிங் உயிரிழந்தார்.  இது நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதுகுறித்து விசாரணை நடத்திய மும்பை போலீசார், சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக கூறி வழக்கை முடித்தது. ஆனால், அவர் எந்தக் காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை.

இதனிடையே, சுஷாந்த் சிங்கின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விசாரித்த போது, அவர் போதைப் பொருட்களை அதிகமாக பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இது குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரித்தனர். 

இந்நிலையில், இந்த வழக்கில் டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் என்சிபி சார்பில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 

அதில், சுஷாந்த் சிங்குக்கு நடிகை ரியா சக்கரவர்த்தி கஞ்சா வாங்கிக் கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரியா சக்கரவர்த்தியின் தம்பி சோவிக் சக்கரவர்த்தியின் பெயரும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்று அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…