சூர்யா – பாலா கூட்டணி படத்தின் டைட்டில் இதுதான்: அதிரடி அறிவிப்பு!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் சூர்யா மீண்டும் இயக்குனர் பாலாவுடன் கூட்டணி சேர்ந்து உள்ளார். குறிப்பாக சூர்யாவின் 41-வது படமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் சூர்யா நடிக்கும் படத்திற்கு வணங்கான் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார்.

அதே போல் பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில் தயாராகி வரும் இப்படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யா இரண்டு வேடங்களில் நடித்து வருவதாகவும் அதில் ஒரு கேரக்டர் மாற்றுத்திறனாளி கேரக்டர் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், நந்தா படம் வெளியாகி 19 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பாலா சூர்யா கூட்டணி எழுந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதோடு வணங்கான் படத்தின் முதற்கட்ட படிப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.