வேற லெவல்!! இரவின் நிழல் படத்தின் முதல் புரோமோ..

ஒத்த செருப்பு படத்தில் நடித்திருந்த பார்த்திபனின் படமானது தேசிய விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றது. இந்நிலையில் தற்போது பார்த்திபன் இரவின் நிழல் என்ற படத்தை இயக்கி உள்ளார். இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்தப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளதாக நடிகரும், இயக்குனருமான பார்திபன் அறிவித்தார். இதனிடையே இப்படம் கேன்ஸ் திரைப்பல விழாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டது. அப்போது இரவின் நிழல் படமானது நிராகரிக்கப்பட்டதால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது.
இந்நிலையில் இரவின் நிழல் படமானது ஜூலை 15இல் வெளியாக உள்ளது, இந்த படத்தில் ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், பிரியங்கா ருத், பிரிகடா போன்றோர் நடித்துள்ளார்கள். ‘அகிரா புரொடக்ஷன்ஸ்’ தயாரித்துள்ளது.
இந்த சூழலில் 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டு நான் லீனியர் திரைப்படம்’ என்ற பெருமையை பெற்றுத்தந்துள்ள படத்தின் ப்ரோமோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.