உறியடி விஜயகுமாரின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியானது..!!

குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தின் உறியடி 2 திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜயகுமார் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

இந்த படத்தை சேத்துமான் புகழ் தமிழ் இயக்குகிறார். கதாநாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார். மேலும் திலீபன், பாவெல் நவகீதன், மரியம் ஜார்ஜ் மற்றும் பலர் இணைந்து நடிக்கின்றனர். 96 படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய மகேந்திரன் ஜெயராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த் வஸந்தா இசையமைக்கிறார்.

ஆக்சன் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கும் உறியடி புகழ் நடிகர் விஜயகுமார்.  இயக்குனர் இவர்தானாமே! | uriyadi fame vijaykumar started action movie -  Tamil Filmibeat

பிரேம் குமார் எடிட்டராகவும், ஸ்டன்னர் சாம் சண்டை பயிற்சியாளராகவும், ஏழுமலை கலை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனங்கள் எழுதியுள்ளார்.

கிராமப்புற பின்னணியில் அரசியல், ஆக்‌ஷன், காதல், கலந்த குடும்ப பாங்கான திரைப்படமாகவும், ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாகவும் உருவாகிறது. இதற்கான படப்பிடிப்பு ஒரே கட்டமாக தொடர்ந்து 60 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.