டாக்டர் பட்டம் வாங்கிய ராகவா லாரன்ஸ்..! வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்..!!

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவின் பன்முகத்தன்மை கொண்ட கலைஞனாக உள்ள ராகவா லாரன்ஸ்க்கு சிறந்த சமூக சேவைக்காக டாக்டர் பட்டத்தை மனித உரிமைகள் ஆணையம் வழங்கி உள்ளது. ராகவா லாரன்ஸ் சினிமாவைத் தாண்டி அவரின் உதவி செய்யும் குணம் அனைவரும் அறிந்த ஒன்று அதை பாராட்டும் வகையில்   மனித உரிமைகள் ஆணையம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.  

மாற்றுத்திறனாளி மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அவர் தொடர்ந்து உதவி வருகிறார். சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் இணைந்து அவருக்கு இந்த விருதை வழங்கி உள்ளனர். 

இது குறித்து ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில்  சமூக சேவைக்காக டாக்டர் பட்டம் பெற்றது எனக்கு கிடைத்த பெருமை. இந்த விருதை எனக்கு வழங்கியதற்காக சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை கவுன்சிலுக்கு மனமார்ந்த நன்றி. என் சார்பாக என் அம்மா இந்த விருதைப் பெற்றதால் இது எனக்கு கூடுதல் சிறப்பு என ட்வீட் செய்துள்ளார். 

ராகவா லாரன்ஸ் தற்போது ருத்ரன் படப்பிடிப்பில் இருப்பதால் டாக்டர் பட்டத்தை அவரது அம்மா பெற்றுக் கொண்டார். டாக்டர் பட்டம் பெற்றுள்ள ராகவா லாரன்ஸ் க்கு ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.