கார்கி இந்த ஆண்டின் சிறந்த திரைப்படங்களில் ஒன்று – உதயநிதி ஸ்டாலின்

கெளதம் ராமச்சந்திரன் இயக்கிய கார்கி படத்தை பெற்றோர்களும் குழந்தைகளும் கட்டாயம் பார்க்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இதில் சாய் பல்லவி ஐஸ்வர்யா லெக்ஷ்மி, காளி வெங்கட், காலேஷ் ராமானந்த் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளார்.
கார்கி படத்தின் மூலம் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் பிரஸ் மீட் சமீபத்தில் சென்னையில் நடந்தது.
கார்கி படத்தை தமிழில் சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. இந்த நிலையில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் இன்னைக்கு கார்கி என்ற ஒரு நல்ல பார்த்தேன். இது குறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ள கார்கி இந்த ஆண்டின் சிறந்த திரைப்படங்களில் ஒன்று.
தியேட்டரில் சென்று பாருங்கள். பெற்றோர்களும் குழந்தைகளும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என்று குறிப்பிட்டுள்ளார்.