ஹாலிவுட்டில் கலக்கும் தனுஷ்: குஷியில் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் தனுஷ் . இவர் தற்போது நானே வருவேன், திருச்சிற்றம்பலம் , வாத்தி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஹாலிவுட்டில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தி கிரே மேன்’. இந்த படத்தில் அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய ரூஸோ சகோதரர்கள் ‘தி கிரே மேன்’ படத்தை இயக்கியுள்ளனர்.

இதனிடையே கடந்த 2009-ல் வெளியான ‘தி கிரே மேன்’ என்ற நாவலை தழுவி இப்படம் பிரமாண்ட பொருட்ச்செலவில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூலை 22-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் சமீபத்தில் தனுஷின் போஸ்டர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தில் பெரும் எதிர்பார்ப்பை எகிற செய்தது.

தற்போது தி கிரே மேன் படத்தை இயக்கிய ரூஸோ சகோதரர்கள் இந்தியா வர இருப்பதாக அவர்கள் வீடியோ மூலம் அறிவித்துள்ளனர். இதற்கு பதில் அளித்த தனுஷ் இது அற்புதமாக உள்ளது என கூறியுள்ளார்.

அதே போல் இந்த படம் ஒரு ரோலர் கோஸ்டர் பயணம் போன்றதாகும், இதில் ஆக்‌ஷன், டிராமா, வேகம் மற்றும் பெரிய சேஸ் எல்லாம் உள்ளது. அற்புதமான நபர்கள் நிறைந்த இந்தப் படத்தில் ஒரு அடக்கமான கதாபாத்திரத்தில் நடிக்கக் கிடைத்ததற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.