நடிகர் விக்ரமின் உடல்நிலை? வெளியான நியூ அப்டேட்!!

சமீபகாலமாக திரை பிரபலங்கள் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவது வாடிக்கையாக அமைகிறது.

அந்த வகையில் கோலிவுட்டில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விக்ரம் கடந்த சில தினங்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் தற்போது சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என சினிமா பிரபலங்கள் மற்றும் அவருடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது விக்ரமுக்கு லேசான நெஞ்சுவலியே ஏற்பட்ட உள்ளதாகவும், மருத்துவமனையில் இருந்து விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என அவரது மேனேஜர் சூர்யநாராயணன் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.

தற்போது நடிகர் விக்ரம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு விக்ரம் டிஸ்சார்ஜ் ஆனதும் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இணையத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…