நடிகர் சிம்புவை சந்தித்த தெலுங்கு பட நாயகன்..!!

தெலுங்கு இளம் நடிகர் ராம் பொத்தினேனி மற்றும் இயக்குனர் லிங்குசாமியின் கூட்டணி ‘தி வாரியர்’ படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாகவும், நடிகர் ஆதி வில்லனாகவும் நடித்துள்ளனர்.அதிரடி போலீஸ் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை சீனிவாச சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் ஜூலை 14-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனது படத்தின் ப்ரோமோஷனுக்காக நடிகர் சிம்புவை படத்தின் கதாநாயகன் ராம் பொத்தினேனி சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்த நிலையில் இந்த படத்தில் சூப்பர் ஹிட் பாடலான புல்லட் பாடலை சிம்பு பாடியுள்ள நிலையில் நடிகர் சிம்புவை தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி சந்தித்து பேசி ஆசி பெற்றார்.