கொலை படத்தின் போஸ்டரை வெளியிட்ட படக்குழு..!!

விஜய் ஆண்டனியின் கொலை படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தை விடியும் முன் படத்தின் இயக்குனர் பாலாஜி குமார் இயக்கி வருகிறார். கொடூரமான த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் கதாநாயகியாக ரித்திகா சிங் நடித்துள்ளார். இவர்களுடன் மீனாட்சி சௌத்ரி, ராதிகா சரத்குமார், அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் நடித்துள்ளனர். க்ரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையில் உருவாகும் இப்படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ், லோட்டஸ் பிக்சர்ஸ் மற்றும் டேபிள் ப்ராஃபிட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றனர். விரைவில் வெளியாகவுள்ள இந்த படம்  குறித்து அறிமுக போஸ்டர்கள் வெளியிடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நடிகை மீனாட்சி சௌத்ரி, லைலா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் அடுத்த போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் முரளி சர்மா, ஆதித்யா என்ற ஏஜென்ட்டாக நடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.