நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு இல்லை: நிம்மதியில் ரசிகர்கள்!!

நடிகர் விக்ரமுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு நேற்று மாலை சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை குறித்து அவரது மேலாளர் தற்போது விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில் நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு இல்லை என்றும் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், சோசியல் மீடியாவில் தவறுதலாக வதந்திகளை பரப்ப வேண்டாம் என விக்ரம் தரப்பில் மேலாளர் சூர்யநாராயணன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மருத்துவமனையில் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாகவும், நடிகர் விக்ரம் தற்போது நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனிடையே நாளை அல்லது நாளை மறுநாள் அவர் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், மிகப் பிரமாண்ட பட்ஜெட்டில் வரலாற்றுப் படமாக உருவாகி வரும் படம் பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் விக்ரம் நடித்திருக்கும் சூழலில் படத்தின் டீசர் இன்று வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.