நடிகர் விக்ரம் மருத்துவமனையில் அனுமதி: ரசிகர்கள் ஷாக்!!

சமீபகாலமாக திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரங்களில் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவது வாடிக்கையாக அமைகிறது. அந்த வகையில் கோலிவுட்டில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மிகப் பிரமாண்ட பட்ஜெட்டில் வரலாற்றுப் படமாக உருவாகி வரும் படம் பொன்னியின் செல்வன். இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யாராய் மற்றும் திரிஷா போன்ற பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தில் நடிகர், நடிகைகளின் போஸ்டர்கள் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த சூழலில் தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் இன்று வெளியாக இருக்கும் நிலையில் நடிகர் விக்ரமுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும், கடந்த மாதம் சிம்புவின் தந்தை டி.ஆர்-க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு தற்போது வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.