அடி தூள்!! ஷாருக்கானுக்கு வில்லனாகும் விஜய்சேதுபதி..

கோலிவுட்டில் காஸ்ட்லி ஜெராக்ஸ் மிஷின் என விமர்சனத்துடன் அழைக்கப்படும் அட்லீ இயக்கிய ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்கள் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது மட்டுமில்லாமல் வசூல் ரீதியிலும் மாஸ் காட்டியது.

இந்நிலையில் தற்போது பாலிவுட்கு என்ட்ரி கொடுத்திருக்கும் அட்லீ பாலிவுட்டில் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் ஷாருக்கானை வைத்து இயக்கிய படத்திற்கு ஜவான் என பெயர் வைக்கப்பட்ட படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இதனிடையே சமீபத்தில் டைட்டில் டீசர் வெளியான நிலையில் இந்த படத்தின் டீசரானது விக்ரம் படத்தின் டைட்டில் டீசர் போன்று உள்ளதாக நெட்டிசன்கள் கலாய்த்து வந்தனர். ஆனால் இதனை கண்டுகொள்ளாத அட்லீ ஜவான் படத்தின் மேக்கிங்கில் பிஸியாக உள்ளார்.

இந்த சூழலில் ஜவான் படத்தின் ஷாருக்கானுக்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி கமிட் ஆகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வில்லன் கதாபாத்திரத்தின் பெயரில் ராணா டக்குபதியில் பெயர் பரிசிலிக்கப்பட்டது. ஆனால் அவர் முந்தைய படங்களில் பிஸியாக இருப்பதால் தயாரிப்பாளர்களால் அவரை நடிக்க வைக்க முடியவில்லை என கூறப்படுகிறது.

ஷாருக்கான் படத்தில் விஜய்சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. விஜய்சேதுபதிக்கு ஏற்கனவே வில்லன் கதாபாத்திரத்தில் நல்ல மார்க்கெட் இருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் எதிர்பார்ப்பு என்பது மேலும் அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.