பூரண குணமடைந்தார் T.R! அமெரிக்காவில் டாக்டர் சொன்ன அட்வைஸ் என்ன தெரியுமா?

சிம்பு

இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தரனுக்கு கடந்த மாதம் நெஞ்சு வலி ஏற்பட்டபோது அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்போது அவரை பரிசோதனை செய்ததில் வயிற்றில் சிறிய ரத்தக்கசிவு ஏற்பட்டு இருப்பாதகவும் அவருக்கு மேல் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினர்.

இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக அவரை வெளிநாடு அழைத்துச் செல்வதாக அவருடைய மகன் சிலம்பரசம் அறிக்கை வாயிலாக அண்மையில் தெரிவித்தார். குறிப்பாக அவர் சுயநினைவுடன் நலமாக இருப்பதாகவும் விரைவில் சிகிச்சை முடிந்து பூரண குணமடைந்து அனைவரையும் நேரில் சந்திப்பார் என்றும் தனது தந்தைக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என கூறினார்.

இந்த சூழலில் கடந்த சில வாரங்களுக்கு முன் டி.ராஜேந்தர் உயர் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு சென்றார். அங்கு அவருக்கு உறுதுணையாக அவருடைய மகன் சிம்பு உடன் இருந்து அனைத்து பணிகளையும் செய்து கொடுத்தாக கூறப்படுகிறது. தற்போது முழுமையாக குணமடைந்த டி.ராஜேந்தர் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியதால் அங்கேயே ஒரு மாதம் குடும்பத்தினருடன் தங்க முடிவெடுத்துள்ளாராம்.

மேலும், தந்தைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்துவிட்டு தற்போது படப்பிடிப்பிற்காக நடிகர் சிம்பு சென்னை வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு சிம்பு நடித்திருக்கும் வெந்து தணிந்தது காடு படம் விரைவில் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.