பழிவாங்கும் முகம் அழகானது! வைரலாகும் நந்தினியான கதாபாத்திரத்தின் புதிய போஸ்டர்

மிகப் பிரமாண்ட பட்ஜெட்டில் வரலாற்றுப் படமாக உருவாகி வரும் படம் பொன்னியின் செல்வன். இப்படத்தில் விக்ரம், கார்த்தி, விக்ரம் பிரபு, சரத்குமார், ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய் மற்றும் திரிஷா போன்ற பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ரவி வர்மன் ஒளிப்பதிவில் டாக்கீஸ் மற்றும் லைகா ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. தற்போது இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் தமிழில் வெளியிடுவதற்கான உரிமையை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றி உள்ளது.

ஏற்கனவே கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா ஆகியோரது தோற்றங்களுடன் கூடிய தனித்தனி போஸ்டர்களால் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது படத்தின் அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. குறிப்பாக நேற்றை தினத்தில் சோழப் பட்டத்து இளவர் மற்றும் ராஜ்ஜியம் இல்லாத இளவரசன், போஸ்டர்கள் வெளியாகியது.

இந்நிலையில் தற்போது பழிவாங்கும் முகம் அழகானது என்றும் பழுவூர் ராணி நந்தினியை சந்திக்கவும் என்ற வாசகத்துடன் ஐஸ்வர்யா ராய் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.