#BREAKING: இசையமைப்பாளர் இளையராஜா, நாடாளுமன்ற மாநிலங்களவை எம்பியாக நியமனம்.

Raja_Music_TNL

இசையுலகில் தனகென்ன தனி இடத்தை பிடித்தவர் இசைஞானி இளையராஜா. இவர் தற்போது நாடாளுமன்ற மாநிலங்களவை எம். பி.யாக நியமிக்கபடவுள்ளர். இதுகுறித்து அதிகாரபூர்வ தகவலை பிரதமர் நரேந்திர மோடி அவரது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

அவர் தெரிவித்தது, “தலைமுறைகளைக் கடந்து இளையராஜா அவர்களின் அற்புத படைப்பாற்றல் மக்களை மகிழ்வித்து வருகிறது. அவரது இசைப் படைப்புகள் பல்வேறு உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துவன. அவரது படைப்புகளைப் போலவே, எழுச்சி ஊட்டுவதாய் அவரது வாழ்க்கைப் பயணமும் அமைந்துள்ளது – எளிய பின்புலத்திலிருந்து உயர்ந்து எட்ட இயலா சாதனைகளை படைத்தவர். அவர் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாய் உள்ளது.”

இவரது நியமனத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.