நடிகைக்கு மாமனார் பாலியல் தொல்லை: பரபரப்பு சம்பவம்!!

சென்னை மாங்காடு அடுத்த கருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த 37-வயதான பெண் தமிழ் சினிமாவில் துணை நடிகையாக நடித்து வருகிறார். அதே நேரம் தமிழ் சீரியல்களில் இவர் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இவர் சென்னை டிஜிபியிடம் புகார் ஒன்றை கொடுத்துள்ளார் அந்த புகாரில் துணை நடிகையின் மாமனார் சரவணவேல் நெடுஞ்சாலை பொறியாளராக இருந்து ஓய்வு பெற்றவர்.

மாமியார் சென்னை பிரபல கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார். நடிகையாக இருப்பதனால் மாமனார் தன்னிடம் அத்துமீற முயற்சிப்பதாக அப்புகாரில் கூறியுள்ளார். மாமனாரின் நோக்கத்திற்கு மறுக்கும் போது தன்னை கொடூரமாக அடித்து துன்புறுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார். அதோடு மாமனாரின் கொடுமைகளுக்கு மாமியார் நாத்தனார் உடந்தையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பேத்தி என்று பாராமல் 15 வயதுடைய தன் மகளிடம் தன்னுடைய மாமனார் அத்துமீற முயன்றதாக போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் சரவணன் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாமனார் தங்களை தாக்குவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியான நிலையில் தாக்கும் போது செல்போன் உடைந்ததால் அவர்களின் ஆடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

துணை நடிகையின் கணவர் மன நலம் குன்றியவர் என்பதால் அவரை வேறு ஒரு இடத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அடித்து துன்புறுத்தியதாக மாமனார் மாமியார் மீது துணை நடிகை அளித்த புகாரின் அடிப்படையில் மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.