உலக திரைப்பட தரவரிசையில் சாதனை படைத்த கடைசி விவசாயி..!  

உலக திரைப்படங்களை தர வரிசைப் படுத்தும் இணையதளமான லெட்டர் போஸ்ட்ல் 2022 ம் ஆண்டு முதல் பாதியில் வெளியான படங்களின் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.இதில் சிறந்த படங்களில் டாப் 25 பட்டியலில் கடைசி விவசாயி படம் கடைசி விவசாயி படம் 4.3 ரேட்டிங்கையும் பெற்று 2வது இடத்தில் உள்ளது.

2022 ம் ஆண்டு முதல் 6 மாதங்களில் உலகம் முழுவதும் தியேட்டர், ஓடிடி உள்ளிட்ட தளங்களில் வெளியான படங்களில் சிறந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மக்கள் அளித்த ரேட்டிங்கில் அடிப்படையில் இந்த படங்கள் தரவரிசை படுத்தப்பட்டுள்ளன. இந்த தரவரிசை பட்டியலில் இடம்பிடிக்க குறைந்தது 1000 புள்ளிகள் ரேட்டிங் பெற்றிருக்க வேண்டும்.

Welcome to Letterboxd • Letterboxd

அதில் முதல் இடத்தை Everything everywhere all at once என்ற சீன மொழி படம் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் டைரக்டர் மணிகண்டன் இயக்கத்தில் இந்த ஆண்டு துவக்கத்தில் ஓடிடி. யில் வெளியான கடைசி விவசாயி படம் பிடித்துள்ளது.

இயற்கை சார்ந்த விவசாயம் என்பதையும் ஆணித்தரமாக சொல்லி இருந்த இந்த படம் பலரிடமும் பாராட்டை பெற்றது. தற்போது  இந்த படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது அனைவரையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…